அறுகம்குடா பயண எச்சரிக்கையை அமெரிக்க நீக்கவேண்டும்: இலங்கை வேண்டுகோள்

அறுகம்குடா தொடர்பில் அமெரிக்கா விடுத்த பயண எச்சரிக்கையை நீக்க வேண்டும் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அறுகம்குடாவில் ஒக்டோபர் 23ஆம் திகதி சுற்றுலாப்பயணிகள் அதிகமாக காணப்படும் பகுதிகளில் தாக்குதல் இடம்பெறலாம் என நம்பகதன்மை மிக்க தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் வேண்டுகோள் விடுத்தமை சுட்டிக்காட்டதக்கது.