அறிகுறிகள் தென்பட்டால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்: பெற்றோர்களே எச்சரிக்கை

நாட்டில் சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையால், காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் “இந்த வைரஸ் தொற்று தற்போது பாடசாலைகள், தனியார் வகுப்புகளில் அதிகம் பரவி வருகின்றது. இதனால் அதிக காய்ச்சல், தலைவலி, சுவாசப் மற்றும் இருமல் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம்.

எனவே தமது பிள்ளைகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் இருப்பின், அவர்களை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது. அத்துடன் பிள்ளைகள் நோய் வாய்ப்பட்டால் பெற்றோர் உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் ஏனையவர்களிடமும் விரைவில் பரவக்கூடிய தன்மையைக் கொண்டதனால், வீட்டில் உள்ள ஏனையவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்ததாக இருக்கும்.

இன்புளுவென்சா வைரஸ் தொற்று கோவிட் தொற்றை போன்றது, அது மக்களிடையே விரைவாக பரவக்கூடியது.”என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்