
அறநெறி ஆசிரியைகளுக்கான கூட்டம்
-மூதூர் நிருபர்-
மூதூர் பிரதேச இந்து குருமார் சங்கத்தின் பராமரிப்பில் இயங்கிவரும் 18 கிராமத்து அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மூதூரில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின் தலைவர் சிவசிறி இ.பாஸ்கரன் குருக்கல் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் அறநெறி பாடசாலைகளின் ஆசிரியர்கள், மூதூர் பிரதேச இந்துகுருமார் சங்கத்தின் குருமாரும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போது இனிவரும் காலங்களில் நடை முறைபடுத்த வேண்டிய விடையங்கள் அறநெறி ஆசிரியர்களின் அறம் சார்ந்த கடமைகள் பற்றி விளக்கமளிக்கபட்டது.
மேலும் கடந்த மாதம் மூதூர் 64ஆம் கட்டை மாணிக்க விநாயகர் அறநெறி பாடசாலைக்குள் இருந்த உடமைகள் முற்றாக சேதமாக்கபட்டமை தொடர்பில் இக்கிராமத்தில் எமது சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு சாவால்களும் தடைகளும் இருப்பதால் அதற்குரிய அரச அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் பராமுகமாக இருப்பதால் இக்கிராமத்தில் சைவ சமய வளர்ச்சின் பாதுகாப்பு கருதி இணைந்து எப்படி செயல்படுவது என்பது பற்றியும் கலந்துரையாடி முடிவுகள் எடுக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
