அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ நித்திய இளைப்பாறினார்

இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் தொடர்பாடல் பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ தனது 85 ஆவது வயதில் நித்திய இளைப்பாறியுள்ளார்.

தேசிய கத்தோலிக்கத் தொடர்பாடல் பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார்.

நித்திய இளைப்பாறியுள்ள அருட்தந்தையின் இறுதி ஆராதனை நிகழ்வுகள் நடைபெறும் தினம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.