
அருகம்பே பகுதிக்கான பயணத்தடை நீக்கம்
அருகம்பே பகுதிக்கு வழங்கப்பட்டிருந்த பயணத்தடையை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நீக்கியுள்ளது.
அருகம்பே பகுதியைத் தவிர்க்குமாறு அமெரிக்கப் பிரஜைகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையை நீக்குமாறு நேற்று வெளிவிவகார அமைச்சு அமெரிக்கத் தூதரகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதையடுத்து இன்று புதன் கிழமை இந்தப் பயணத்தடையை நீக்கியுள்ளது.
பொத்துவில் அருகம்பே பிரதேசத்தில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றுக்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்கா கடந்த மாதம் 23ஆம் திகதி தமது பிரஜைகளுக்கு பயணத்தடை விதித்திருந்தமை குறிப்பிடதக்கது.
