
அரிசி, சோளம் மற்றும் முட்டை இறக்குமதி : புதிய அமைச்சரவை முடிவு
சோளம், முட்டை மற்றும் அரிசியை இறக்குமதி செய்வதற்கான பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 15,000 மெற்றிக் தொன் சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோழி தீவன உற்பத்திக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேவேளை, கீரி சம்பா போன்ற 50,000 மெட்ரிக் தொன் GR11 அரிசி வகையை இறக்குமதி செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அரிசி விலை உயர்வில் போட்டியை ஊக்குவிக்கும் வகையில் தனியார் துறை மூலம் அரிசி இறக்குமதி செய்யப்படும்.
மேலும், உள்ளூர் சந்தையில் முட்டை விலையை நிலைப்படுத்துவதற்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை பரிந்துரைத்த இந்திய பண்ணைகளில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டுத்தாபனம் தற்போது 155 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது
அதேவேளை 2023 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் மேலும் 18 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
