அரிசி அதிக விலைக்கு விற்பனை : முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு கீரி சம்பா அரிசி தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கீரி சம்பா அரிசி ஒரு கிலோகிராம் 260 ரூபாய் என்ற நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகார சபையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 260 ரூபாவுக்கு அரிசியை விற்பனை செய்யும் விற்பனையாளர்களிடம் இருந்து மாத்திரம் அரிசியைக் கொள்வனவு செய்யுமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமான விலைக்குக் கீரி சம்பா அரிசி விற்பனை செய்யப்படுமானால், 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்குமாறும் நுகர்வோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.-