
அரிசிக்கான விதிக்கப்பட்ட விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளவில்லை
அரிசிக்காக வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளியிடப்பட்ட மொத்த மற்றும் அதிகபட்ச சில்லறை விலையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறி, சில்லறை விற்பனையாளர்கள் சிலர் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக அந்த அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பச்சை அரிசி 220 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் நாடு அரிசி 230 ரூபாவாகவும் , ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 240 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசி 260 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும்.
எனவே, அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அவற்றில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ள வில்லை எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.