அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையினால் நட்டம்
அரசாங்கத்தினால் அரிசிக்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையின் காரணத்தால் தாம் நட்டத்திற்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து செலவு, பொதிச் செலவு என்பனவற்றை அவதானிக்கும் போது 10 முதல் 15 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் நட்டம் ஏற்படுகிறது. அரிசி விற்பனையால் எந்தவித பயனும் ஏற்படாது என சில்லறை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அரிசியைப் பதுக்கி வைத்துள்ள அரசி ஆலை உரிமையாளர்கள்,
அதிகூடிய விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை முன்னெடுக்கும் சுற்றி வளைப்புகள் தொடர்கின்றன. அரிசி தொடர்பில் 200க்கும் அதிகமான சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2,300 மெற்றிக் டன் அரிசி ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கடந்த 4 ஆம் திகதி முதல் தனியாருக்கு அரிசி இறக்குமதி செய்ய வழங்கப்பட்ட அனுமதிக்கமைய இந்த அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
விரைவில் அந்த அரிசியை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்