அராலி தெற்கு சைவத் தமிழ் இளைஞர் மன்றத்தின் 10 வது ஆண்டு விழா
-யாழ் நிருபர்-
அராலி தெற்கு சைவத் தமிழ் இளைஞர் மன்றத்தின் 10 வது ஆண்டு விழா நேற்று சனிக்கிழமை அராலி அகாயக்குளம் விநாயகர் திறந்த வெளியரங்கில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முதலில் அராலி கரைப்பிட்டி விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் கரைப்பிட்டி விநாயகர் ஆலயத்திற்கு முன்பாக இருந்து விழா அரங்குவரை பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்றது. இந்த ஊர்வலத்தின் போது பொம்மலாட்டம், சிலம்பாட்டம் என்பன இடம்பெற்றன.
பின்னர் கொடியேற்றம் இடம்பெற்றது. அதை தொடர்ந்து மங்கல விளக்கேற்றப்பட்டு, இறை வணக்கம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.
அதனைத் தொடர்ந்து மங்கல இசை, வரவேற்பு நடனம், வரவேற்புரை, கலை நிகழ்வுகள், விருந்தினர்கள் உரை, இளைஞர் மன்றத்தினால் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.
இளைஞர் மன்றத்தின் தலைவர் பரமலிங்கம் திரிகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசப்பிள்ளை பிரதம அதிதியாகவும், சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் சிறப்பு விருந்தினராகவும், கு.பாலமுருகன், மிலாஷினி றோகேசன், ப.சிந்துஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்துடன் இந்து இளைஞர் மன்றத்தினர், கல்விமான்கள், இளைஞர் – யுவதிகள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.