அராலியில் விளையாட்டு வித்தகன் அமரர் சிறிகரன் நினைவுக்கிண்ண சுற்றுப்போட்டி

-யாழ் நிருபர்-

அராலி விளையாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சிறிகரனின் நண்பர்களின் நிதிப்பங்களிப்பில் பேரவையின் இணைப்பாளர் ப.தர்மகுமாரன் தலைமையில் விளையாட்டு வித்தகன் அமரர் இ.சிறிகரன் நினைவுக்கிண்ண சுற்றுப்போட்டி அராலி பிறிமியர் லீக் சுற்றுப்போட்டியாக நேற்றையதினம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இறுதிப்போட்டியில் அராலி பிளாஸ்ரர் அணியும் அராலி பன்ராஸ் அணியும் மோதிக்கொண்டன. இதில் அராலி பிளாஸ்ரர் அணி சிறிகரன் நினைவுக் கிண்ணத்தை தனதாக்கிக்கொண்டது.

இந்நிகழ்வுக்கு அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரியின் பிரதி அதிபர் ஜெகதீஸ்வரன் சங்கானை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் கபிலன் மேன்னால் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் க.குமாரசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்