அரச பாடசாலைகளுக்கான அடுத்த தவணை எதிர்வரும் 12ம் திகதி ஆரம்பம்!

-மட்டக்களப்பு நிருபர்-

அரச பாடசாலைகளுக்கான முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.

அநேகமான பாடசாலைகளுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் 12 ஆம் திகதிக்குப் பிறகு இது குறித்து முறையிடலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.