அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் நான் எதிரானவன்

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் தீர்மானத்திற்கு தானும் தனது குழுவினரும் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், முரண்பட்ட தீர்மானங்களுக்கு அமைய செயற்படும் சர்வகட்சி அரசாங்கத்துடன் பேசுவதில் அர்த்தமில்லை எனவும் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் தாம் எதிரானவன் எனவும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை குறைவாகப் பயன்படுத்துவோரின் மின்சாரக் கட்டணம் நூறு வீதத்தால் அதிகரிப்பதையும், சுமார் 30 வீதமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதையும் மக்களால் தாங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.