அரச நிறுவனங்களில் 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள்

மத்திய அரசாங்க நிறுவனங்களில் தற்போது 3,000க்கும் அதிகமான சாரதி வெற்றிடங்கள் நிலவுவதாக ஐக்கிய சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்க நிறுவனங்களில் தேவைப்படும் 23,400 சாரதிகளுக்குப் பதிலாக, தற்போது 20,000 சாரதிகளே சேவையில் உள்ளனர்.

2016 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசாங்க நிறுவனங்களுக்குச் சாரதிகள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யப்படாததாலேயே இந்தப் பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளதாகச் சங்கத்தின் தலைவர் யூ.ஏ. லக்ஷ்மண் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் வாகனங்களைச் செயற்பாட்டில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் சேவையில் உள்ள சாரதிகள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது, ஆனால் மட்டுப்படுத்தப்பட்ட நேரத்திற்கே மேலதிகக் கொடுப்பனவு கிடைக்கிறது.

வழமையான 5 வருட இடமாற்ற நடைமுறை பின்பற்றப்படாமல், சில சாரதிகள் 10 முதல் 12 வருடங்கள் வரை ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக வெற்றிடங்கள் மேலும் கூடும் நிலையில், சாரதிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒரு திட்டத்தை விரைவாகத் தயாரித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய சாரதிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.