அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களை அழைக்க தீர்மானம்

அரச நிறுவனங்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தப்பட்ட பணிக்குழாமினரை கொண்டு சேவைகளை முன்னெடுப்பதற்கு மீண்டும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சுற்று நிருபம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இயன்ற வரையில் சேவையாளர்களை வீட்டில் இருந்தவாறே பணியாற்ற அனுமதிக்குமாறும், எவ்வித இடையூறும் இன்றி நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு தேவையான குறைந்தபட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறும் நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.