அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கான அறிவித்தல்

கூட்டங்கள் மற்றும் விழாக்களுக்கு நட்சத்திர வகுப்பு ஹொட்டல்களில் இருந்து உணவுகளை கொண்டு வர வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

நட்சத்திர வகுப்பு ஹொட்டல்களில் சாப்பிடுவது என்பது பல நிறுவனங்களில் குறிப்பாக நிர்வாக கூட்டங்களின் போது நீண்ட காலமாக நடந்து வருகிறது.

தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என தெரிவித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர், அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.