
அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமனம்
அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு பி.ஏ.ரீ. றொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகக் கடமையாற்றிய பி.ஏ.எஸ் அதுள குமார அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளமையால் வெற்றிடமாகவுள்ள குறித்த பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அரச தொழில்முயற்சி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய இலங்கை கணக்கீட்டு சேவை விசேடதர அதிகாரியாவர்.
குறித்த நியமனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
