
அரச ஊழியர்களின் வேதனத்தை அதிகரிக்கத் திட்டம்
அடுத்த பாதீட்டில் அரச ஊழியர்களின் வேதனத்தைக் கணிசமான அளவு அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று திங்கட்கிழமை மஹரகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் இதுவரை தீர்க்கப்படாத 35 கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவும் தொழில் பிரதி அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
