அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள் – விவசாய அமைச்சின் செயலாளர்
அரச அதிகாரிகள் திறமையாகவும், பொறுப்புடனும் செயற்படாவிட்டால் அரச உத்தியோகத்தர்களை மக்கள் தாக்குவார்கள், என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
99% விவசாயிகள் நெல் அறுவடை செய்ய இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
எதிர்காலத்தில் இதற்கு அதிக அளவு எரிபொருள் தேவைப்படும், அது எப்போது என்று பேசப்படுகிறது.
தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இன்னும் சில நாட்களில் தனியார் வாகனங்கள் அல்லது பொதுப் போக்குவரத்தில் இருந்து விலகி அல்லது பழைய மரபுகளை பின்பற்ற வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே தற்போதைய நெருக்கடி நிலையைப் புரிந்து கொண்டு அதனைச் சமாளிப்பதற்கான திட்டங்களை வகுப்பதில் அரச அதிகாரிகள் முன்னின்று செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
