அரச உத்தியோகத்தர்களின் கொடுப்பனவுகள் ஓரிரு வாரங்கள் தாமதம்
அரச உத்தியோகத்தர்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சேவைகளின் செலவுகளை சந்திப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையில் 05% குறைக்க அமைச்சர்கள் சபை தீர்மானித்துள்ளது.
மேலும், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதும் ஓரிரு வாரங்கள் தாமதமாகும் என நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்ததாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.