அரசு ஊழியர்களுக்கு சிறப்பு பண்டிகை முன்பணம் வழங்கப்படும்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பொதுத்துறை ஊழியர்களுக்கு ரூ.4,000 வரை சிறப்பு முன்பணம் செலுத்த அங்கீகாரம் அளிக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை, அனைத்து அமைச்சக செயலாளர்கள், மாகாண தலைமை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

பண்டிகைக் காலத்தில் பாரம்பரியமாக ஆண்டுதோறும் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் திருப்பிச் செலுத்த முடியாத முன்பணம் ரூ.4,000 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, ஜனவரி முதல் திகதியிலிருந்து பணம் செலுத்தப்பட்டு அதே ஆண்டு பிப்ரவரி கடைசி நாளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என இச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.