அரசுப் பேருந்தில் பயணத்தின் போது இளைஞர் உயிரிழப்பு

இந்தியாவில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தில் உயிரிழந்த பயணியின் உடலைக் கைப்பற்றி பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

பழைய குயிலம் கிராமத்தைச் சேர்ந்த கலைமணி என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் சேலத்திலிருந்து செங்கத்துக்கு அரசுப் பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்து செங்கம் பேருந்து நிலையம் வந்தடைந்ததும் பயணிகளை இறங்குமாறு சாரதி கூறிய நிலையில், குறித்த இளைஞர் மட்டும் அவரது இருக்கையில் அசைவற்றுக் கிடந்துள்ளார்.

அவர் உயிரிழந்தது தெரியவந்ததை அடுத்து, பேருந்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் குறித்த இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்