அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகம்

‘நாங்கள் ஒன்று சேர்ந்து நாட்டை கட்டி எழுப்புவோம்’ என்னும் தலைப்பிலான அரசாங்கத்துக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் விநியோகிக்கப்பட்டன.

தேசிய மக்கள் சக்தி இந்த துண்டு பிரசுர விநியோகத்தை முன்னெடுத்திருந்தது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சு. இளங்குமரன் தலைமையில் துண்டுபிரசுரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அரசுக்கு எதிராக துண்டுப்பிரசுரம் விநியோகம்