அரசியல் கட்சி ஆரம்பித்தார் நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் விஜய் மக்கள் இயக்கம் “தமிழக வெற்றி கழகம்” என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரையிலான காலமும் விஜய் மக்கள் இயக்கத்தினால் பல மக்கள் நலத்திட்டங்களும், சமூக சேவைகளும், நிவாரண உதவிகளும் செய்து வரப்பட்ட நிலையில், முழுமையான சமூக பொருளாதார அரசியல் சீர்த்திருந்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக நடிகர் விஜய் சுட்டிக்காட்டியுள்ளார்.