அரசியல் கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
2025 ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகளாக அங்கீகரிப்பதற்குத் தகுதியான தரப்பினரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சியாகச் சின்னங்கள் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்ப பத்திரம் நாளை முதல் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மாலை 3.00 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்பலாம் என்றும் அல்லது சம்பந்தப்பட்ட கட்சி செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.