அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை

அரசாங்கம் சூதாட்ட விடுதிகளை ஊக்குவிக்கவில்லை என சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட ‘கனவுகளின் நகரம்’ (City of Dreams) போன்ற இடங்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் சூதாட்ட விடுதிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உள்ளுர்வாசிகள் சூதாட்ட விடுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் தெளிவான விதிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை ஒரு உயர்நிலை சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது என்பதை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.