அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய எதிர்க்கட்சி திட்டம்

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்கு தாக்கல் செய்யப் போவதாக எதிர்க்கட்சி அறிவித்துள்ளது.

இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனை குறிப்பிட்டார்.

இந்த அனர்த்த நிலைமை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிகரான பாரதூரமான சம்பவம் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் அனர்த்தம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதற்காகவே வழக்கு தொடரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் மேலும் தெரிவித்தார்.