அயர்லாந்து அணி வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஓமான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 235 ஓட்டங்களை பெற்றது.

அதற்கமைய 236 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 18 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 139 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.