அம்பியூலன்ஸ் வண்டி – லொறி நேருக்கு நேர் மோதி விபத்து!

-பதுளை நிருபர்-

அம்பியூலன்ஸ் வண்டி லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

தியத்தலாவ வைத்தியசாலையில் இருந்து பதுளை பொது வைத்தியசாலைக்கு நோயாளர்களை ஏற்றிச் சென்ற அம்பியூலன்ஸ் வண்டி நோயாளர்களை வைத்தியசாலையில் இறக்கிவிட்டு மீண்டும் தியத்தலாவை நோக்கி சென்ற போது பதுளை பண்டாரவளை வீதி தோவ திக்கராவ பிரதேசத்தில் லொறி ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி பலத்த காயமடைந்த நிலையில் தியத்தலவை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துக்குள்ளான அம்பியூலன்ஸ் வண்டியின் சாரதி, சாரதியின் இருக்கையில் இருந்து மிகவும் சிரமத்தின் மத்தியில் பொது மக்களால் வெளியில் எடுக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பண்டாரவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.