அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும் , இனங்களுக்கிடைய இனமோதல்களையும் ஏற்படுத்தும் வகையில் முகநூல் ஊடாக பல்வேறு வகையான செயற்பாடுகளில் மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய தேரர் செயற்பட்டு வருவதாக தெரிவித்து ஏறாவூர் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் முறைப்பாடு செய்துள்ளார்.

மட்டக்களப்பு விகாராதிபதி அம்பிட்டிய தேரர் கடந்த சில வாரங்களாக இம்மாவட்டத்தில் உள்ள பலரையும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், இனங்களுக்கிடையில் பாரிய மோதலை தூண்டும் வகையில் பல்வேறு இனவாத கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று வெள்ளிக்கிழமை இது தொடர்பாக பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இம்முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டினை அடுத்து ஏறாவூர் பொலிசார் எதிர்வரும் 30ஆம் திகதி திங்கட்கிழமை ஏறாவூர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர்.

அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் முறைப்பாடு

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க