
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம்
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய சிறி மற்றும் இலங்கை டென்னிஸ் சங்கத்தின் தவிசாளர் இக்பால் பின் இஸ்ஹாக் ஆகியோர் நேற்று சனிக்கிழமை நிந்தவூர் கமு. அல் அஷ்ரக் தேசிய பாடசாலைக்கு விஜயம் செய்தனர் .
இதன் போது அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு வரும் டென்னிஸ் விளையாட்டு கூடத்தை பார்வையிட்டதுடன், டென்னிஸ் விளையாட்டு துறையின் அபிவிருத்தி மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ அப்துல் கபூர், பிரதி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


