அம்பாறை தெஹியத்தகண்டிய வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு ஆளுநர் விஜயம்

-கிண்ணியா நிருபர்-

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர அவர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.எம். ரத்வத்தே  நேற்று வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் தெஹியத்தகண்டிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் அந்த அலுவலகத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் குறித்து அதிகாரிகளிடமிருந்து விளக்கங்களை பெற்றுக் கொண்டதுடன், தேவையான நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார்கள்.

குறித்த சந்திப்பில் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்