அம்பாறையில் வாக்குகள் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை: கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன்
அம்பாறை மாவட்டத்தில் வாக்குகள் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அம்பாறை மாவட்ட வேட்பாளரும் கல்முனை ஐக்கிய வணிக சங்கத் தலைவரும் பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினருமான கிருஷ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
சமகால அரசியல் தொடர்பில் அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் அவர் தெரிவித்ததாவது,
கடந்த முறை தமிழ் பிரதிநிதித்துவம் அம்பாறை மாவட்டத்தில் இழக்கப்பட்டதற்கு கருணா காரணம் இல்லை கூட வாக்கெடுப்பதை விட குறைவாக வாக்கெடுத்து வாக்குகளை பிரிப்பவன் தான் அதற்கு காரணமாக இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் 1994 ஆம் ஆண்டிலே மாவை சேனாதிராசா இங்கு வந்து பிரதிநிதித்துவத்தை இழக்கச் செய்தார். இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
