அம்பாறையில் வழக்கு அறையில் இருந்த வெடிபொருட்கள் மாயம்
அம்பாறை நீதவான் நீதிமன்றின் வழக்கு அறையில் இருந்த வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அம்பாறை பொலிஸார், நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
1998ஆம் ஆண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட தோட்டாக்களே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர்.