அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்-

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கு 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் நேற்று அம்பாறை மாவட்ட பிரதேச செயலகத்தில் வழங்கி வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்கு தமது வீடுகளை பூரணப்படுத்துவதற்காக இந்நிதி வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 150 பயனாளிகள் மூன்றாம் கட்டத்தில் பயன் பெற இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேயவிக்ரம, தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் மற்றும் லகுகல பிரதேச சபையின் உதவி தவிசாளர் ரவிந்திர குணவர்தன ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு
அம்பாறையில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைப்பு