அம்பாறையில் கருணா கப்பலில் வந்து பிரதி நிதியை இல்லாமல் செய்தார்: ஜனார்த்தன்
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒரே ஒரு தமிழ் பிரதி நிதியையும் இல்லாமல் செய்வதற்காகவே சில டயஸ்போறாக்களும் பொரும்பான்மை அரச கட்சிகளும் ஒட்டுக்குழுக்களும் இணைந்த சதி திட்டமே கடந்த காலத்தில் கருணா கப்பலிலும் தற்போது பிள்ளையான் படகிலும் புஸ்பராஜா சங்கிலும் களமிறக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழ் மக்கள் ஜாக்கிரதையாக இருந்து ஒன்றிணைந்து தமிழரசுக்கு வாக்களியுங்கள் என தமிழரசுகட்சியின் இளைஞரணி வேட்பாளரும் பட்டதாரியும் கிழக்கு மாகாண கரேற் அதிகாரியுமான கனகரெத்தினம் ஜனார்தன் தெரிவித்தார்.
அம்பாறை ஆலையடிவேம்பிலுள்ள அவரது கட்சி காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் மக்களுக்கு சவாலான தேர்தலாகும். ஒரே ஒரு தமிழ் பிரதி நிதியை மட்டும் இதுவரை பெறக்கூடிய இந்த மாவட்டத்தில் சில காலங்களில் அந்த பிரதிநிதி கூடவராமல் ஆக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் சில அரச கட்சிகளுடன் சில ஒட்டுக்குழுக்களும் சில வெளிநாட்டு டயஸ்போறாக்களும் சேர்ந்து செய்த சில சதிகள் காரணமாக தமிழ் பிரதிநிதிகள் வரமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சில வெளிநாட்டு அமைப்புக்கள் மக்களுக்கு ஆதரவாகவும் சில அமைப்புக்கள் மக்களின் துன்பத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஈழம் என்ற கருத்துக்களை உருவாக்கி கொண்டு தங்களுடைய சுகபோகத்தை அனுபவிக்கின்ற அமைப்புக்களும் இருக்கின்றன.
இவ்வாறு கடந்த காலத்தில் கருணா கப்பல் சின்னத்தில் வந்தார் தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்தார் அவ்வாறே தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக தற்போது பிள்ளையான் படகிலும் புஸ்பராஜா சங்கில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பதை தமிழ் மக்கள் விளங்கி கொள்ளவேண்டும்.
இன்று கூட 10 வீதமான வாக்கை பெறமுடியாத சங்கு சின்னமானது தமிழ் மக்களிடம் சென்று வாக்குகளை பிரிக்கும் செயற்பாட்டில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது இவர்கள் அரசினதும் சில புலம்பெயர் அமைப்புக்களின் கைகூலிகளாக இயங்குபவர்கள்.
இதில் சங்கு சின்னத்தில் போட்டியிடும் புஸ்பராஜாவுக்கு ஒரு நிலையான கட்சியோ கொள்கையோ இல்லை . காலத்துக்கு காலம் கட்சி மாறி கொள்ளும் இவர் அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லாத நிலையில் மாட்டு பண்ணையாளர் சங்கத்தை வைத்து அரசியல் செய்துவரும் இவர் என்னை ஒரு இராணுவ அதிகாரியாக துண்டுபிரசுரத்தை வெளியிட்டுள்ளார் இதனை மக்களுக்கு தெளிவூட்ட வேண்டியுள்ளது.
நான் ஒரு இராணுவ அதிகாரியல்ல கரேற் அதிகாரி அதாவது பாடசாலைகளில் ஸ்கவுட், முதலுதவி, பாண்ட், குழு போன்று மாணவர்களின் ஒழுக்கம் தலைமைத்துவ விருத்தி உடற்பயிற்சியை விருத்தி செய்வதற்கா பயிற்சியளிக்கும் கரேற் பிரிவின் கிழக்கு மாகாணத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்ட தமிழ் அதிகாரியான நான் முன்னணி பாடசாலைகளில் இந்த பயிற்சிகளை வழங்கி இன்று இருநூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதற்கு அடிப்படையாக அமைந்துள்ளோன் எனவே கரேற்றுக்கும் இராணுவத்துக்கும் வித்தியாசம் தெரியாத புஸ்பராஜா எனும் அறிவாளி அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை காப்பாற்ற போவதாக நாடாளுமன்றம் சென்று என்ன செய்ய போகின்றார் என்று தெரியவில்லை.
கடந்த காலத்தில் தமிழரசு கட்சியில் நாவிதன்வெளி தவிசாளராக அரசியலுக்கு வந்த இவர் அவரது மனைவி பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு பின்னர் பிள்ளையானின் ரி.எம்.வி.பி கட்சி தாவி கிழக்குமாகாணசபை உறுப்பினரான பின்னர் சுதந்திர கட்சிக்கு மாறி கிழக்குமாகாண தேர்தலில் போட்டியிட்டு இரண்டாயிரம் வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்த பின்னர் தற்பேது சங்கு சின்னத்தில் களமிற்ப்பட்டுள்ளார்.
சில வெளிநாட்டு அமைப்புக்கள் சில முஸ்லீம் அமைப்புக்களும் பெரும்பான்மை கட்சிகளும் உதவுவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டுவருகின்றது எனவே இவர் ஒரு கொள்கையில்லாது காலத்துக்கு காலம் கட்சிமாறிக் கொண்டுட இவரை தமிழ் பிரதி நிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்காக களமிறக்கப்பட்டுள்ளார் இவருக்கு தமிழ் தேசியத்தைபற்றி பேசவதற்கு எந்தவித தகுதியும் இல்லை.
கடந்த 15 வருடமாக மாட்டு பண்ணையாளராக இருந்து மாடு மேய்த்த அவர்களின் பிள்ளைகளும் இன்று மாடு மேய்க்கின்ற நிலமையில் இருக்கின்றனர் அவர்களை ஒரு முதலாளியாக்கும் தொழில் ரீதியான வழிகாட்டலை செய்யாது அவர்களை அடிமைகளாக வைத்து கொண்டு தனக்கு ஆதரவு தெரிவித்து வேலை செய்யாவிட்டால் உங்கள் மாடுகளை மேச்சல் தரையில் இருந்து வெளியேற்ற வேண்டிவரும் என சிலரை அச்சுறுத்தியுள்ளார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கின்றது. இவ்வாறு இனவாதத்தை கக்கிகொண்டு மக்களை ஏமாற்றிவருகின்ற இவர் மீண்டும் தமிழ் தேசியம் பேசிவிட்டு தானும் வெளிநாடு செல்வதற்கான ஒரு நடைமுறையை செய்துவருகின்றாரே தவிர மக்களுக்காக இல்லை என்பதை மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
இந்தமாவட்டம் அனைத்து மக்களும் வாழுகின்ற மாவட்டம் இதில் தமிழர்கள் சிறுபான்மையாக இருக்கின்றனர் இந்த அடிப்படையில் எமக்கு ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயமாக தேவை கல்வி, தொழில் நிலைமைகள் மற்றும் அபிவிருத்தி செய்யவேண்டியப பல விடையங்கள் இருக்கின்றன எனவே உரிமையுடன் கூடிய அபிவிருத்தியை கொண்டு இலங்கை தமிழரசுகட்சியின் வீட்டு சின்னத்துக்கும் அபிவிருத்தியை இலக்காக கொண்ட எனது இலக்கமான 3ஆம் இலக்கத்துக்கும் வாக்களிப்பதன் மூலமாக எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறமுடியும் என்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்