அம்பாறையில் உணவகமொன்றின் மீது தாக்குதல்
அம்பாறையில் உணவகமொன்றின் மீது தாக்குதல்
அம்பாறை நகருக்கு அருகில் அமைந்துள்ள இறக்காமம் – வரிப்பதான் சேனையில் அமைந்துள்ள சலாமத் உணவகத்தில் 8 பேர் கொண்ட குழுவினரால் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹிங்குரானை பகுதியைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழுவினரால் உணவகம் தாக்கப்பட்டதோடு, உணவகத்தின் உரிமையாளரும் தாக்கப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து, உணவகத்தின் உரிமையாளர் உட்பட தாக்குதல் நடாத்திய குழுவைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஆகிய மூவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்