
அம்பாறையில் இருந்து திருகோணமலைக்கு முதியோர்கள் சுற்றுலா
-திருகோணமலை நிருபர்-
அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட முதியவர்கள் நேற்று சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்துக்கு சமயச் சுற்றுலா ஒன்றினை மேற்கொண்டனர்.
வெருகல் சித்திர வேலாயுத சுவாமி கோவில், கங்குவேலி அகத்தியர் தாபனம், சிவன் கோவில், கோணேஸ்வரர் கோவில், இலட்சுமி நாராயணன் கோவில்இகாளிகோவில் கன்னியா வெந்நீர் ஊற்று முதலிய இடங்களையும் பார்வையிட்டனர் .
திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கப் பணிமனைக்கும் முதியோர்கள் வருகை தந்ததுடன் மாவட்டத்தில் காணப்படும் முக்கிய கோயில்கள் குறித்தும் புராண கால வரலாறுகள் குறித்தும் கலந்துரையாடினர்.
இதன் போது திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் திரு சண்முகம் குகதாசன் அவர்கள் மூத்தோரை வரவேற்று அவர்களுக்கு மதிய உணவு வழங்கி வைத்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்