அமைதியான முறையில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பமானதாகப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பரீட்சை தொடர்பான எந்தவித முறைகேடுகளும் பதிவாகவில்லை எனவும், திட்டமிட்டவாறு தடங்கலின்றி உரிய நேரத்தில் சகல பரீட்சை நிலையங்களில் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

ஏதுவான காலநிலை நிலவியமையினால், சகல மாணவர்களும் எவ்வித சிக்கலுமின்றி பரீட்சை எழுதியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2,849 பரீட்சை நிலையங்களில் இன்றைய தினம் காலை 9.30க்கு ஆரம்பமான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பிற்பகல் 12.15 வரை நடைபெற்றது.

குறித்த பரீட்சைக்கு இம்முறை 3,20,879 மாணவர்கள் தோற்றியிருந்ததாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்