அமைச்சர்களிடம் பத்து பதினைந்து லீற்றர் எரிபொருள் கேட்கின்றனர்

எரிபொருள் மற்றும் எரிவாயு கேட்டு பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து நாளாந்தம் நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் வருவதால் அமைச்சர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.

சிலர் தங்கள் வீடுகளுக்கு வந்து எரிபொருள் கேட்டு வம்பு செய்வதாகவும்,  சிலர் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அழைத்து எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவி கோருவதாகவும் அமைச்சர்கள் தொலைபேசிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,

இதற்கு முன்னர் அமைச்சர்களிடம் பதவி உயர்வு, இடமாற்றம் கோரியவர்களும் தற்போது பத்து பதினைந்து லீற்றர் எரிபொருள் கேட்கின்றனர்.

இது மிகவும் கவலைக்கிடமான சூழ்நிலையாக மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.