
அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை – அமைச்சர் டக்ளஸ்
-கிளிநொச்சி நிருபர்-
அமைச்சரவையில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டதாக, உண்மைக்கு புறம்பான செய்திகள் பரப்பப்படுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழில் எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் செய்திகள் பரப்பப்படும் நிலையில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,
அமைச்சரவையில் பெற்றோல் விலையேற்றம் தொடர்பில் தீர்மானங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நேற்று திங்கட்கிழமை யாழ் மாவட்டத்தில் 10இற்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெற்றதாக, அவர் தெரிவித்தார்.
