அமேசான் காட்டில் 17 நாட்களின் பின்னர் பச்சிளம் குழந்தை உட்பட 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு

கொலம்பிய அமேசான் காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விமான விபத்தில் பெற்றோர் உயிரிழந்த நிலையில் கைக்குழந்தை உட்பட 4 பேர் 17 நாட்களுக்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

கொலம்பிய அமேசான் அடர்ந்த காட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 11 மாத குழந்தை உட்பட நான்கு பழங்குடியின குழந்தைகள் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.

இராணுவத்தின் கடினமான தேடல் முயற்சிகளுக்கு பின் குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பெட்ரோ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

மே மாதம் முதலாம் திகதியன்று விபத்துக்குள்ளான இந்த விமானத்தில் பயணித்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணம் செய்த குழந்தைகள் உயர் தப்பியுள்ளனர் என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இவர்களை காட்டிற்குள் தேடும் நடவடிக்கைகளுக்கு 100 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மோப்ப நாய்களுடன் சென்று தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 17 நாட்கள் தீவிர தேடுதலுக்கு பின் பச்சிளம் குழந்தை உட்பட 3 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.