
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு ஊக்கத்தொகை: ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
அமெரிக்க ராணுவ வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்குவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா நிறுவப்பட்ட ஆண்டான 1776-ஐ நினைவுகூரும் வகையில், 14.5 இலட்சம் ராணுவ வீரர்களுக்கு தலா 1,776 அமெரிக்க டொலர்கள் ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாகவே இதற்கான காசோலைகள் அனுப்பப்பட்டுவிட்டன.
அத்துடன் கடந்த 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், ஈரானின் அணுசக்தி அச்சுறுத்தலை அழித்து மத்திய கிழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதியை நிலைநாட்டியுள்ளதாகவும் டிரம்ப் பெருமிதம் தெரிவித்தார்.
மேலும் கடந்த 7 மாதங்களாக அமெரிக்காவிற்குள் சட்டவிரோத குடியேற்றம் ‘பூஜ்ஜியம்’ என்ற நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
