அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ள வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ

வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ (Nicolas Maduro) தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பில் (US Custody) இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வெனிசுவேலாவில் இனிமேல் மேலதிக இராணுவ அல்லது அரசியல் நடவடிக்கைகள் எதுவும் தேவைப்படாது என்று தாம் எதிர்பார்ப்பதாக மார்கோ ரூபியோ குறிப்பிட்டதாக செனட்டர் மைக் லீ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுமத்தப்பட்டுள்ள குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை எதிர்கொள்வதற்காகவே நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.