அமெரிக்க தேர்தல் : வெளியாகியுள்ள முடிவுகளின்படி முன்னிலையில் யார்?

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் உள்ளார் என அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் சில இடங்களில் வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருவதுடன் சில வாக்குப் பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

ஜனநாயக கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்குப் பதிவுகளில் ஈடுபட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தேர்தலில் 270 தேர்வாளர்களைப் பெற்றுக் கொள்பவர்கள் அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படுவார்.

இந்தநிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் அமெரிக்காவின் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளாகியுள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் வாக்காளர்களுக்கிடையே அங்குள்ள ஜனநாயகமும் பொருளாதாரமும் முக்கியமான பிரச்சினைகளாக உள்ளதாக வரிசைப்படுத்தப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கருக்கலைப்பு மற்றும் குடியேற்றம் அங்குள்ள முக்கிய பிரச்சினைகளாகக் காணப்பட்டன.

இந்தநிலையில், 73 சதவீதமான வாக்காளர்கள் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக நம்புவதாகக் கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்