இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதி இன்று (24) வர்த்தக வங்கிகளில் சற்று அதிகரித்துள்ளது. இதன்படி, பல வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.334ஐ அண்மித்துள்ளது.
சம்பத் வங்கியில் டொலரின் விற்பனை விலை ரூ.335 ஆக அதிகரித்துள்ளதுடன், செலான் வங்கியில் ரூ.334.90 ஆகவும், NDB வங்கியில் ரூ.334.25 ஆகவும் பதிவாகியுள்ளது. மக்கள் வங்கியில் ரூ.334.01 ஆகவும், கொமர்ஷல் வங்கியில் ரூ.333.50 ஆகவும் விற்பனை விலை காணப்படுகிறது.
இதனிடையே, வங்கிகளின் கொள்வனவு விலையிலும் மாற்றம் பதிவாகியுள்ளது. சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூ.327 ஆக அதிகரித்துள்ளதுடன், மக்கள் வங்கியில் ரூ.325.93 ஆகவும், NDB வங்கியில் ரூ.325.25 ஆகவும் பதிவாகியுள்ளது.










