
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இன்றைய தினம் செவ்வாய் கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய் கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 308 ரூபாய் 58 சதமாகவும் விற்பனை பெறுமதி 318 ரூபாய் 46 சதமாக பதிவாகியுள்ளது.
