அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபாய் 48 சதம், விற்பனைப் பெறுமதி 301 ரூபாய்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 23 சதம், விற்பனைப் பெறுமதி 390 ரூபா 43 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய் 10 சதம், விற்பனைப் பெறுமதி 326 ரூபாய் 84 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 328 ரூபாய் 20 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 69 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 92 சதம், விற்பனைப் பெறுமதி 211 ரூபாய் 57 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபாய் 99 சதம், விற்பனைப் பெறுமதி 191 ரூபாய் 26 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 216 ரூபாய் 70 ரூபாய், விற்பனைப் பெறுமதி 226 ரூபாய் 42 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.