அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாக இலங்கை உறுதி

வர்த்தக பற்றாக்குறையைக் குறைப்பதிலும், வரி மற்றும் வரி அல்லாத தடைகளைக் குறைப்பதிலும் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளது.

அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளை இம்மாதம் 22ஆம் திகதி சந்தித்த இலங்கை தூதுக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

குறுகிய காலத்தில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்