அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், அவர் சாதாரண அறிகுறிகளுடன் இருப்பதாகவும், தற்போது வைரஸ் தடுப்பு மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ஜோ பிடன் தற்போது வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவரது உத்தியோகபூர்வ கடமைகள் வழமை போன்று மேற்கொள்ளப்படும்.

ஜனாதிபதி இன்று வியாழக்கிழமை காலை வெள்ளை மாளிகை ஊழியர்களுடன் தொலைபேசியில் பேசினார்.

மற்றும் ஒன்லைனில் திட்டமிடப்பட்ட சந்திப்புகளில் பங்கேற்பார், என வெள்ளை மாளிகையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

79 வயதான ஜோ பிடன், பதவியேற்பதற்கு முன்பு இரண்டு டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.